மழலை வாழ்த்து
மலர் என்று பெயரிட்டேன்
மல்லிகையாய் சிரிக்கிறாய்
மலரே என்று அழைத்தேன்
தாவி துள்ளி வருகிறாய்
பொழியும் நிலவே
புன்னகை மலரே
மாணிக்கத் தொட்டிலில்
கண் வளர் மலர் பதுமையே
தேன்தமிழ் கவிஞன் தோட்டத்து
செண்பகப் பூவே
வளர்க வளர்க வளர்க !
---கவின் சாரலன்