நான் காதல் எனப்படுபவள்

ஆதாம் ஏவாளில்
தொடங்கிய
என் பயணம்
சங்க காலத்தில்
தழைத்து செழித்தும் வளர்ந்திருந்தது..!

தமிழுக்கும்
என் பயணத்திற்குமான பந்தம்
ஆதி காலம் தொட்டே
எங்களிருவரில் பயணப்பட்டுக்கொண்டிருந்தது...!

மானுடத்தின் பல புதிர்கள்
என் பயணங்களாலேயே
அவிழ்க்கப்பட்டன..!

உலக நாகரீகங்களுக்கு
பாதை அமைத்தும் ,
உலக உயிர்களுக்கு
உணர்வு கொடுத்தும் ,
மானுட மாண்புகளைப்
பேணிக் காத்தும்,
குடும்ப உறவுகளை
அர்த்தப்படுத்தியுமாய்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
என் பயணம்...!

என்று
சாத்தியத்தாலும்,
வெட்டி கௌரவங்களாலும்
வெட்டுப்பட்டு, காயப்பட்டு
குற்றுயிரோடு
வீசி எறியப்பட்டிருக்கிறேன்
தண்டவாளங்களில்,
தீக்கங்குகளிலும்..!

வழக்கம் போலவே
ஒன்றுமே தெரியாதவர்கள் போல
கண்களைப் பொத்திக் கொள்ளுங்கள்...!

என்னுடல் எரிக்கப்படும்
தீக்கங்குகளிலிருந்து
பிரகாசிக்கும்
பேர் வெளிச்சம்
குருடாக்கக் கூடும்
உங்கள் கண்களை..!

எழுதியவர் : விஜயசாந்தி .G (19-Jul-16, 12:11 pm)
பார்வை : 102

மேலே