கறை படியும் கைகள்

ஏதேனும் ஒரு நாளில்
எவ்வித காரணமும் இன்றி
அலுவலகத்தில்
அனைவருக்கும்
பரிமாறப்படும்
காபியிலோ தேநீரிலோ
நுகர முடிகின்றது யாரோ ஒருவனின்
உழைப்பின் வாசத்தையும்
கூடவே சாபத்தையும்...!

எழுதியவர் : விஜயசாந்தி.G (20-Jul-16, 5:10 pm)
பார்வை : 103

மேலே