உங்க மொபைல் ஹேங் ஆகிறதா--



உங்க மொபைல் ஹேங் ஆகிறதா? - இதை செய்ங்க
Sha




’டூயல் சிம், மெமரி கார்டு, கம்மி விலை, பேட்டரி என எதுவும் இல்லாத ஆப்பிள்னு நினைச்சியா... ஆண்டிராய்டுடா’ என எவ்வளவுதான் தம் கட்டினாலும், தொங்கு ராஜா தொங்கு என மொபைல் தொங்கும் போது தான் டொங்கல் ஆகி விடுகிறோம். என்ன பண்ணலாம்?

Cacheயை கொல்லுங்க

மொபைலில் இருக்கும் ஒவ்வொரு ஆப்யும், தன்னால் முடிந்த வரை cacheயை பயன்படுத்தும். வலைதள வேகத்தை அதிகப்படுத்த இவை எடுத்துக்கொள்ளும் Cache, நம் மெமரியை பதம் பார்க்கும். மெமரியில் இருக்கும் எல்லா இடத்தையும் இவை எடுத்துக்கொள்ள, புதிதாக ஏதேனும் ஆப்யை டவுன்லோடு செய்தால், பிம்பிளிக்கா பிளாப்பி என பல் இளிக்கும் மொபைல் .

Settings --> Storage --> Cached Data என்ற ஆப்சனை க்ளிக் செய்தால் , இப்படி வரும்,

தாராளமாய் அதை அழியுங்கள். குறைந்தது 1 ஜிபிக்கு ஃபைல்கள் அழியும். அதற்குபிறகு மொபைலை ரீ ஸ்டார்ட் செய்துவிட்டு. உபயோகித்துப் பாருங்கள். தோனி உடன் ரன் ஓடவே நமது மொபைல் தயாராகிவிடும்.

மெமரி கார்டுல எல்லாத்தையும் போடுங்க

தற்போது விற்கப்படும் ஆண்டிராய்டு மொபைல்களில், குறைந்தது 8 ஜிபி வரை இன்டெர்னல் மெமரி இருக்கும். ஆனால் , 64 ஜிபி வரை எக்ஸ்டெர்னல் மெமரி கார்டு போட்டுக் கொள்ளலாம். நீங்கள் பார்க்கும் படங்கள், கேட்கும் பாடல்கள் எல்லாவற்றையும், அந்த மெமரி கார்டில் சேமியுங்கள். முடிந்த அளவிற்கு இன்டெர்னல் மெமரியை ஃப்ரீயாக வைத்திடுங்கள்.

ஒரு வாரத்திற்கு 50 பாடல்கள் கேட்பீர்களா?. 300 பாடல்களை எக்ஸ்டெர்னல் மெமரியில் சேமியுங்கள். தேவையே இல்லாமல் 2000 பாடல்களை எதற்காக சேமித்து வைத்து இடத்தை அடைக்கிறீர்கள் ?

மொபைலில் டவுன்லோட் செய்யும் ஆப்கள் பலவற்றை , உங்களால இன்டெர்னல் மெமரியில் இருந்து, எக்ஸ்டெர்னல் மெமரிக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்யுங்கள்

settings --> Storage --> default write disk

இந்த ஆப்சன் உங்கள் மொபைலில் இல்ல என்றால், Settings --> Apps--> All செல்லுங்கள். மொபைலில் இருக்கும் எல்லா ஆப்யையும் காட்டும். ஒரு ஆப்பை நீங்கள் க்ளிக் செய்தவுடன் move to SD card என ஒரு ஆப்சன் இருக்கும். அதை க்ளிக் செய்து எக்ஸ்டெர்னல் மெமரியில் சேவ் செய்யுங்கள்.

ஆப் ரீ-இன்ஸ்டால் அவசியம்

ஃபேஸ்புக் குடும்பத்தில் இருக்கும் ஃபேஸ்புக், மெஸெஞ்சர் , வாட்ஸ்-அப் போன்ற மூன்று ஆப்கள் மட்டும், சாப்பிடும் மெமரியை நீங்கள் கணக்கிட்டால், ஷாக் ஆகி விடுவீர்கள் . இன்ஸ்டால் செய்யும் போது ஃபேஸ்புக்,மெஸெஞ்சர், வாட்சாப் இவை மூன்றின் மொத்த அளவு 100 எம்பி தான் இருக்கும். ஆனால். இவை நம் மெமரியை திங்க ஆரம்பித்து, சில மாதங்கள் கழித்து பார்த்தால், ஃபேஸ்புக் 300 எம்பியில் வந்து நிற்கும்.

அதனால், ஃபேஸ்புக், மெஸெஞ்சர் போன்ற தினமும் பயன்படுத்தும் ஆப்களை அன் இன்ஸ்டால் செய்துவிட்டு ரீ-இன்ஸ்டால் செய்யுங்கள். வாட்சப்பை அப்படி செய்ய வேண்டாம். டாட்டா மிஸ் ஆக வாய்ப்பு இருக்கிறது.

ஆட்டோ அப்டேட் வேண்டாம்

WI-Fi யில் இருக்கிறீர்களா? இதை எல்லாம் ஆட்டோ அப்டேட் செய்து கொள்ளவா என மொபைல் ஆரம்பிக்கும். தயவு செய்து அதையெல்லாம் ஆஃப் செய்து வையுங்கள்.எந்தவொரு அப்டேட்டும் சந்தைக்கு வரும் போது 100% திறம்பட இருக்காது. நீங்கள் வைத்து இருக்கும் ஆப் வேலை செய்யவில்லை என்றாலோ, இல்லை அதில் ஏதாவது ஒரு புதிய வசதி இல்லையென்றால் மட்டும் அப்டேட் செய்யுங்கள்.

PlayStore--> Settings-> Auto-update apps

ரீ-ஸ்டார்ட் அவசியம். ஃபேக்டரி ரீசெட் அபாயம்

உங்கள் கம்ப்யூட்டரை ஒரு நாளில் இருமுறையவது அணைத்துவிட்டோ, அல்லது ரீஸ்டார்ட்டோ செய்வீர்கள். ஆனால் உங்கள் மொபைலை கடைசியாக எப்போது ரீஸ்டார்ட் செய்தீர்கள் என்று தெரியுமா?.

வாரத்திற்கு இருமுறையாவது மொபைலை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். சில மொபைல்களில் பவர் பட்டனை அழுத்திப்பிடித்தாலே ரீஸ்டார்ட் அல்லது பவர் ஆஃப் எனக் கேட்கும். அதில் ரீஸ்டார்ட்டை தேர்வு செய்யுங்கள். அல்லது செட்டிங்க்ஸில் அதற்கான ஆப்சன் இருக்கும்

ஃபேக்டரி ரீசெட் என்பது, நீங்கள் டவுன்லோடு செய்து இருக்கும் ஆப்கள் எல்லாவற்றையும் அழித்துவிடும். உங்கள் மொபைலின் சாஃப்ட்வேர் நீங்கள் மொபைல் வாங்கும் போது எந்த நிலையில் இருந்ததோ அதே நிலையில் மீண்டும் கிடைக்கும். ஆனால், பாடல்கள், படங்கள், என எல்லாம் காணாமல் போய்விடும். அதனால், ஃபேஎக்டரி ரீசெட் என்பதை அவசியம் இல்லாமல் செய்யாதீர்கள்.

இதெல்லாம் வேணாம் பாஸ்

மொபைல் ஃப்ரீஸ் ஆகிறதா, இந்த ஆப்பை இன்ஸ்டால் செய்யுங்கள், என 100க்கும் அதிகமான ஆப்கள், பிளே ஸ்டோரில் கொட்டிக்கிடக்கும். இதில் இருக்கும் சிலவற்றை நீங்கள் டவுன்லோடு செய்து வைத்து இருக்கலாம். அதையெல்லாம் தயவு தாட்சண்யமின்றி அழித்துவிடுங்கள். அவை திங்கும் மெமரிகளையாவது நீங்கள் காப்பாற்றலாம்.

====================================
முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.கட்டுரை ஆசிரியரின் பெயரைக் குறித்துவைக்க மறந்துவிட்டேன்

எழுதியவர் : முகநூல் (23-Jul-16, 6:33 am)
பார்வை : 163

மேலே