ஹைக்கூ சரம்

பணக்காரனாகிவிட்டான்
பாகன்.
இன்னும்
பிச்சையெடுக்கிறது
யானை!
***********************
ஆணி குத்திய
கால்களுடன்
செருப்பு தைக்கும்
சிறுவன்!
***********************
ஆயிரம் பெற்றோர்கள்
இருந்தும்
முத்தமிட ஒரு
குழந்தைக்கூடயில்லை
முதியோர் இல்லத்தில்!
***********************
அழைத்தக்குரலுக்கு
ஓடி வர
ஆள் இல்லாத
நெடுஞ்சாலை விபத்தில்,
உயிருக்குப்போராடி
இறந்துக்கிடந்தார்
அவசர ஊர்தி ஓட்டுனர்!
***********************
எரிவாயு
விலையேற்றத்தைக்
கண்டித்து
எதிர்க்கட்சியினர்
எரித்துவிட்டனர்
ஏழைக்குடிசைகளை!
***********************
குங்குமம் வார இதழை
விரும்பிப்படிக்கும்
வாசகி விதவையானாள்!
***********************
பட்டினி சாவை எதிர்த்து
ஊர் மக்கள் இன்று
உண்ணாவிரதம்!
***********************
அதிக
வலியெடுக்கிறபோது
"அம்மா" என்று
கத்திவிடுகிறது
அனாதை குழந்தை...!!
***********************

எழுதியவர் : Vishva Mithiran (27-Jul-16, 4:49 pm)
பார்வை : 227

மேலே