வருகையால் மனம் மகிழ்ந்தேன் உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே

இங்கே பல ஆயிரம் பேர்
இயங்குவதற்கு இவன் தான் காரணம்

இவனின் பாராட்டு மட்டும்
இல்லையெனில்
இங்கே அதிகம்
பேர்
எழுத நாட்டம் இல்லாமல்
ஒதுங்கிடுவர்
ஆனால்
இவனின்
பாராட்டுகள்
அவர்களுக்கு
ஓர் ஊக்கத்தையும்
கவிதை மேல்
தமிழ் மேல்
ஓர் போதையையும்
தந்து எழுத வைத்துக் கொண்டிருக்கிறது

அன்பு தான்
மனிதனுக்கு
அவசியம்
அதை நன்கு
உணர்ந்தவன்
இவன்
அதனால்
தான்
தினமும்
தன்னால்
முடிந்த உதவியை
பாராட்டுகள்
மூலம்
செய்து
உந்துசக்தியாகிறான்
எல்லோருக்கும்
எழுத்துலகில்

வஞ்சகம்
பொறாமை
அறியா
நல்லவன்

காதல்
இவன்
கவிதைகளில்
தேனாய் சிந்தும்
தத்துவங்கள்
தெறிக்கும்
இவன் கவிதைகளில்
அவலங்கள்
அலறிடும்
இவன் வார்த்தைகளில்
தாய்மை இவன்
கவியில்
வாழ்ந்து கொண்டே இருக்கும்

தத்துவ உலகின்
தீக்குளிப்பில்
வாழ்க்கையை கற்றுத்தருபவன்
இவன்

எண்ணச்சுடரும்
வண்ணக்கவியும்
என்று
கற்பனையை
தூண்டுபவன்
இவன்

எங்கும்
முதல் ஆளாய்
எல்லோர் கவியிலும்
இவன்
கருத்திருக்கும்

நாம்
எல்லோரும்
சொல்ல வேண்டும்
இவனின் வரிகளை
இவனுக்கே

வருகையால் மனம்
மகிழ்ந்தேன்.உமது
கருத்தால் கவிக்கு
உயிர் கொடுத்தேன்
பல்லாயிரம் கோடி
நன்றிகள் நட்பே!!

என்று

அன்போடு
கவிதைகளின்
கருத்தால்
தட்டிக்கொடுப்பவன்
கவிதையால்
உலகை அளப்பவன்
அந்த உலகை
கண்முன்னே காட்டுபவன்
நல்லவன்
பண்பானவன்

புல்லாங்குழலின் இசை நீ
அந்த மூங்கிலின் கதறல் நீ
தாயின் தாலாட்டு நீ
குழந்தையின் கதறல் நீ
தென்றலின் தேகம் நீ
பெண்மையின் சினுங்கல் நீ
காதலின் நெஞ்சம் நீ
கண்ணீரின் மொழி நீ
உண்மையின் விழி நீ
சமுதாயத்தின் குரல் நீ
ரௌத்திரத்தின் பொருள் நீ
முப்பாலும் நீ
தமிழ்ப்பாலின் வீரம் நீ

நீ = உன் கவிதை

உனது
ஆசைகள்
நிறைவேறட்டும்
தோழா.....
என்றும்
நலமுடன்
வளமுடன்
வாழ்வாங்கு வாழ்வாயாக.....

எல்லாம்
வல்ல இறை
உன்னுடன் இருப்பான்

எல்லா புகழும் ஒருவனுக்கே
(இறைவனுக்கே)

உமக்கு
இவ்வரிகளை
சமர்பிக்கிறேன்
ஸர்பான்

~ உன் தோழி
பிரபாவதி வீரமுத்து

பின் குறிப்பு :
நான் புகழ்ச்சிக்காக
யாரையும் புகழ்ந்து பேசமாட்டேன்
அதே போல் நல்ல உள்ளத்தை அகத்திலிருந்து ஊரறிய
பாராட்டாமல் இருக்க மாட்டேன்

எனக்கு மிகவும் பிடித்த
A.R.R ல் முடித்தேன்

~ பிரபாவதி வீரமுத்து

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (29-Jul-16, 10:23 am)
பார்வை : 394

மேலே