பிஞ்சு தமிழ்
கொஞ்சு இதழில்
பிஞ்சு மொழியாம்
கொஞ்சு தமிழ் பேசிட
அன்னை அவள் 'அம்மா' என கூறிட
திரும்பிச் சொல்லும் தத்தை பிஞ்சு அவள்
கொஞ்சு இதழில் உயிரை மாய்த்து
மெய் கொண்டு ,உயிர் மெய்யால் 'ம்மா'
என கூறும் என் பிஞ்சு தமிழில்
பிழை கண்டால் நக்கீரனும் புலவனல்ல