தினம் ஒரு தாலாட்டு தனிமை - 73 = 185

“கண்ணனூரூ ரோட்டுல என் காரு போகுது – அது
உன்னைப்பாத்த சோக்குல சொக்கி நிக்குது
கன்னியே உனக்கு நான் கண்ணி வைக்கிறேன்
வந்து நீ மாட்டிக்கிட்டா பந்தி வைக்கிறேன்”

அய்யாவுக்கு சலாம்போடும் பெண்ணே
கொய்யா கனி சுமந்து வாடி நீ முன்னே
ஆப்பம் பாயா காம்பினேஷன் போலே
நீயும் நானும் பெஸ்ட் லவ்வர்ஸ் தானே..!

ஆணழகன் போட்டி நடந்தா
அதுல நான் முதலாளா இருப்பேன்
சோழவரம் ரேசு நடந்தா
அங்க நான் புயலாக பறப்பேன்

ஆயியையும் அப்பனையும் அழைத்துச்செல்ல
வெக்கேஷ்னுல நான் வந்திருக்கேன்
சொந்த பந்தங்க எனக்கு இங்கு அதிகம்
தெரிஞ்சா பொண்ணு கொடுக்க கீயூவூல நிக்கும்
ஆனாலும் என் மனசு உன்னிலே தஞ்சம்
அயலான் மகளே இறங்கி வா கொஞ்சம்.

மெட்டெடுத்துப் பாட்டுப்பாட கத்துக்கிட்டேன் – என்னை
மேஸ்ட்ரோ இளையராஜாவிடம் ஒப்படைத்தேன்
வெட்டு குத்து வேல் கம்பும் கத்துக்கிட்டேன் – அதை
கத்துக் கொடுத்த வாத்தியார கும்பிட்டேன்

திருவாரூர் திருத்தேரு சக்கரமே – அது
தெரு வீதி உலா வரும்போது அற்புதமே
சிறுவாணி தீர்த்தத்தில் கற்பகமே – நீ
குளிக்கிற அழகு வெகு அற்புதமே..!

நீ என்னோட கோலு
உன்னை அடைவதே என் குறிக்கோளூ
நான் உன்னோட வாலு
என்னை அடைந்தால் நீ பெரிய ஆளூ..!

எழுதியவர் : சாய்மாறன் (7-Aug-16, 3:42 pm)
பார்வை : 64

மேலே