சொல்வதெல்லாம் உண்மை-யா

எட்டரை மணி சிலருக்கு ஏழரை போல
கொப்பரை தேங்காய் கொட்டப்படுகிறது!
எத்தனை எத்தனை கதைகள் காதைகள்
அதில் எல்லாம் கண்ணகிகள் கோவலர்கள்
சிலவற்றில் ராவணனின் திரோபதிகள் இன்னும்
சிலவற்றில் ராமனில்லை சூர்ப்பநகைகளே!

வெட்கங்கெட்டவர்கள் வெட்கப்படவைக்கிறார்கள்
வெட்கித்தலைகுனிந்து வேதனை வெளிப்படுத்துகையில்
கண்ணீரில் எங்களை கவலைப்பட வைக்கிறார்கள்,
சொல்வதெல்லாம் இங்கே நிச்சயம் உண்மையாகவா இருக்கும்?

கட்டப்பஞ்சாயத்து கல்லா கட்ட நாட்டாண்மை இல்லை பெண்மை
பெருமைப்பட்டு போகிறது சிலர் மட்டும் சிறுமைப்பட.

இது ஒரு டாக் ஷோ என்று எங்கள் நாட்டில் எல்லா சானல்களில்
இது கள்ளத்தனமாக இப்போது கலாச்சாரமாகின்றது
டாஸ்மாக் ஆண்களை குறிவைக்கிறதென்றால்
இதோ இது பெண்களை பிரச்சினைகளை பெரிதாக்குகிறது

சம்சார சங்கீதம் சந்தோச பூகம்பமாய்
சலித்து படைக்கும் கதைகள் கூட
அக்கம்பக்கம் வீட்டில் நடப்பதுபோல
என்று அலசப்படும் போது
மனசுக்குள் ஏதோ இடர்கின்றது
இல்லை இல்லை
இங்கு இருள் லேசாக பரவுகின்றது.!

எழுதியவர் : செல்வமணி (10-Aug-16, 10:31 pm)
பார்வை : 111

மேலே