கல்யாண நினைவுகள்
கொஞ்சம் கொஞ்சமாய் பூக்கும் சந்தோஷங்கள்.....
இனம் புரியா இன்பங்கள்...
காரணம் இல்லாத சிரிப்புகள்...
யாரும் அறியா சிறு சிறு சிணுங்கல்கள்...
சின்னச்சின்ன சேட்டைகள் ...
உறவுகளின் கேலி கிண்டல்களில்
கரையும் நேரங்கள்...
தனிமையில் நம்முடனான கற்பனைகள்..
இந்த இடைவெளிகளில்
உனக்கும் எனக்குமான ஊடல்கள்..
என்றும் மாறாத இந்த அன்புக்கிடையில்,
கைக்கோர்க்கும் அந்த நாட்களை
எண்ணிக்கொண்டு நாம்........