உறக்கம்

குழந்தையின் உறக்கத்தில்
சிரிப்பை கண்டேன்
முதியவரின் உறக்கத்தில்
கவலையை கண்டேன்
அம்மாவின் உறக்கத்தில்
களைப்பை கண்டேன்
அப்பாவின் உறக்கத்தில்
உழைப்பை கண்டேன்
ஏழையின் உறக்கத்தில்
வறுமையை கண்டேன்
பணக்காரனின் உறக்கததில்
பகட்டை கண்டேன்
நோயாளியின் உறக்கத்தில்
வலியை கண்டேன்
மனிதனின் உறக்கத்தில்
வெறுமையை கண்டேன்
என்னவனின் உறக்கத்தில்
என்னை கண்டேன்
என் தாய் மடியின் உறக்கத்தில்
இந்த உலகினை மறந்தேன்

எழுதியவர் : கா. அம்பிகா (19-Aug-16, 1:33 am)
Tanglish : urakam
பார்வை : 164

மேலே