என் அத்தை மகள்

கன்னி அவள் என்

அத்தை மகள்

கற்பனைக்கெட்டா பேரழகி

தந்ததில் கடைந்தெடுத்த

வண்ணப் பாவை

ஒளி தரும் பால் நிலா

அவள் முகம்

மணம் வீசும் கார்குழலாள்

அதில் அழகியதோர் திலகம்

மருண்ட மான் விழியாம் கண்கள்

வளைந்த வானவில் ஒத்த புருவங்கள்

ஆயிரம் கதைகள் சொல்லும் இமைகள்

கொவ்வை பழம் தோற்கும் அதரங்கள்

அவற்றில் சற்றே மறைந்து தெரியும்

முத்துப் பற்கள்

அழகிய நீண்டு வளைந்த காதுகள்

அவற்றை அலங்கரிக்கும் முத்து தோடுகள்

மனம் கவரும் நாசி அது தாங்கும்

சிவப்புக்கல் மூக்குத்தி

வஞ்சிக்கொடி இடையாள்

தோகை மயில் நடையாள்

கொஞ்சும் தமிழ் மொழியாள்

நேற்று வரை என்னோடு

ஓடிப் பிடித்து விளையாடியவள்

பரிசமான் பின்னே

நான் பார்க்க இன்று

பெரும் நாணத்தால் தலைகுனிந்து

அத்தையின் தலைப்பில் பாதி மறைந்து

பார்த்தும் பார்க்காத பார்வை ஒன்று

வீசுகிறாள் அது சொல்லும்

ஆயிரம் கதைகள்

என்னை சிறை பிடித்து வைத்ததோ

அந்த கள்ளப் பார்வை!

எழுதியவர் : (20-Aug-16, 6:34 pm)
Tanglish : en atthai magal
பார்வை : 156

மேலே