புறம்
நேரிசை ஆசிரியப்பா
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையு முடையே மெந்துணைச் சுவராய் !
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
கெட்ட மதுவால் கேடுகள் சூழ
அவரும் மாண்டா ரந்தோ
சுவரும் போச்சே சுகம்பறி போச்சே !
துறை : கையறுநிலை
திணை : பொதுவியல்
-விவேக்பாரதி