எதற்காய் என் இதயம் கொன்றாய்

மனசு செத்துக் கிடக்கிறது..
மரத்து விட்டது உன் மறுதலிப்பால்..
உணவு உண்ண மறுக்கிறது உடல்..
நீர் அருந்துவதை விட்டுவிட்டது வாய்..
மெல்ல மெல்ல துடிக்கிறது இதயம்..
வான்வெளியில் பறக்க நினைத்தவனை
நடுவழியில் விட்டு விட்டாய்..
பல ராகங்கள் படைக்க நினைத்தவனை
சோகம் ராகம் இசைக்க வைத்திட்டாய்..
உன்னை பிடிக்கவில்லை என்றே சொல்லியிருக்கலாம்..
உன்னிடம் செல்வம் இல்லை என்றேனடி சொன்னாய்..
எதற்காய் என் இதயம் கொன்றாய்..
உனக்குத்தான் இதயமே இல்லையே..
உன்னிடமேன் புலம்புகிறேன்...
ஓ மன்னிக்கவும்.....

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Aug-16, 8:35 am)
பார்வை : 414

மேலே