பரிசு பெற்ற மனசு
பரிசு பெற்ற மனசு, இளசு விரும்பிய புதுசு, வயசு தேடிய சொகுசு என்று சென்ற பயணம் தொடரும் தருணம் முன்னால் வந்ததோ துன்பம் அதையும் தாண்டி சென்ற பிறகு தான் இன்பம்
உள்ளம் கொண்ட சோகம் எண்ணம் தேடிய தனிமை சென்ற பயணத்தின் அருமை தனிமை எனும் இனிமையுடன் சேர்ந்து கட்டிடங்களை பார்த்த வண்ணமாக வாழ்க்கை மாறிப்போனது
சந்தர்ப்பம் என்பது வாழ்க்கையில் பல தடவைகள் எம்மை தொடரும் அதை தவறவிட்டால் பின்பு கஷ்டங்களுடன் தான் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வண்ணம் இருக்க வேண்டிவரும்
பேச்சின் மகிமை செயலின் அருமை என்பதே மனிதனின் திறமை என்பதை அறிந்த பிறகே அது மனிதனிற்கு இனிமையாகும். எனவே நோக்கம் கொள்ள தயக்கம் எனும் மயக்கம் தடையல்ல
நடந்து சென்றாலும், பறந்து சென்றாலும் வாழ்க்கையின் இலக்கை அடைந்துக் கொள்வதென்பது மிகவும் கடினமான ஒன்றாகும். என்பதை தெட்டதெளிவாக உணர வேண்டும்.