ஓர் தாயின் கதை பல விகற்ப இன்னிசை வெண்பா

பல விகற்ப இன்னிசை வெண்பா ..

சாந்துணையும் ஓர்மகன் சேர்த்திருப்பான் என்றெண்ணி
வாழ்ந்திருந்த ஒர்வீடும் கைவிட்டுப் போனபின்
சோர்த்திருக்கும் போதிலே சேர்ந்திருக் காமலே
வேரறுத்து விட்டான் மகன்

போராடி போராடி வாழ்ந்துவந்த வாழ்விலே
வாயாடி மாற்றுப்பெண் வாய்மொழிந்த தீஞ்சொற்கள்
நாள்தோறும் தாக்கவே எஞ்சியி ருந்தகொஞ்ச
பாசமும்தூள் தூளா னதே

ஈராறு ஆண்டுகள் பெற்றதாயும் பெண்ணிடம்
வாழ்ந்திருக்கும் போதிலே பெற்றமகன் செய்த
பெருங்குற்றம் வாட்டவே ஓர்பகல் வேளையில்
தாய்முன்னே தோன்றினான்கா லன்

சுற்றிநின்ற சொந்தங்கள் கண்ணீர் பொழியவே
பெற்றதாய் நீத்தவுடல் பெட்டகத்தில் வைத்திருக்க
குற்றம் இழைத்தமகன் பெற்றதாய் நெஞ்சிலே
இட்டான் இறுதிக் கனல்

கூடு விடுத்ததோர் ஆவியும் வான்புகுமுன்
கூவியழும் கூட்டத்தில் யாரே னுமொருவர்
"வா"வெனக் கூறுவாரென் றெண்ணியே காத்திருக்க
"தீ"யிலிட்டு சுட்டார்மே னி

வான்நோக்க ஆவியும் கண்டதே வான்மீதில்
நின்றிருக்கும் முன்னோர்கள் பல்லோரும் புன்னகைத்து
"வா"வென் றழைத்துத்தம் பொற்கரங்கள் நீட்டியதும்
"ஓ"வென் றழுதாள்ஓர் தாய்

எழுதியவர் : (29-Aug-16, 10:23 am)
பார்வை : 82

மேலே