இனி வரமாட்டாள் காவேரி

காவிரியில் ............
தண்ணீர் கேட்டு தமிழர்கள்
போராட்டம் !
காவிரியை .............
சிறைபிடித்து கன்னடர்கள்
போராட்டம் !
என்னடா ????.....
இந்திய தேசமிது!
சொட்டு தண்ணீரைக்கூட ....
விட்டு தராதவனை !
இந்தியர் யாவரும்
என்னுடன் பிறந்தோர் ....என்று
எப்படி சொல்லமுடியும் ?
பொழிகின்ற ....
மழை நீரை சேமிக்க
வழிவகை தெரியாத
தமிழா !!!!!!.......
குளம் வெட்டுவதில் கூட
கோடிக்கணக்கில் ...
கொள்ளையடிக்கும் ...உன்
அரசியல் தலைவனை
அப்புற படுத்தாதவரை ...இனி
அரை டம்ளர் தண்ணீர்கூட
அடுத்தவனிடம்?
வாங்க முடியாது !

எழுதியவர் : இரா .மாயா (1-Sep-16, 6:42 pm)
பார்வை : 72

மேலே