வரமா

சற்று முன் பதித்த தடங்கள்
மறந்து விடுகின்றன
வழி மாறித் தடுமாற வைத்து விடுகிறது
என்றோ பதிந்தவைகள்
விழிமுன் விட்டகலா விழிக்கின்றன
இன்றயை மறந்து நாளையை எதிர்பார்த்தலில்
என்றோ நடந்தவை நிழலாடுதல்
முதுமையின் வரமா...? சாபமா......?
---- முரளி

எழுதியவர் : முரளி (2-Sep-16, 7:10 am)
பார்வை : 79

மேலே