பல விகற்ப இன்னிசை வெண்பா உறங்கும் கணவன்

பல விகற்ப இன்னிசை வெண்பா ..
உறங்கும் கணவன் உசுப்பி எழுப்பி
இரவில் உறங்கும் பொழுதினில் அந்நாள்
ஒருகையென் மீதிருக்கு மென்றவள் சொல்ல
ஒருகைவைத் தான்மே னியில்
கைமே லிருக்கவும் சிந்தை குளிர்ந்தவள்
முத்தம் பதிவாய் தருவீரே என்றதும்
நித்திரை விட்டொரு கன்னம்மீ தில்ஒரு
முத்திரை யிட்டான் அவன்
முத்தமிட்டுக் கன்னத்தில் செல்லமாக ஓர்முறை
பற்றுவீரே பல்லாலே என்றில்லால் சொல்லவே
சற்றுசினம் கொண்டவன் மென்மெத்தைக் கட்டில்
விடுத்தெழுந்து செல்லவேரி டம்
கணவன் எழுந்து கதவைத் திறக்கவே
செல்வது எவ்விடம் என்றே வினவ
கழற்றிய பல்லை கொணர்ந்து வருவேன்
அதுவரை காத்திருஎன் றான்