நம் இதயம் இடமாறுதே
மனம் தடுமாறுதே நம் இதயம் இடமாறுதே அது ஏன் தெரியவில்லை
தூக்கத்தில் கண்ட கனவும்,என்னை தூங்கவிடாமல் செய்யுதே அது ஏன் புரியவில்லை
காலம்கூட காலை வாறுதே,காத்திருந்தால் நேரம் மிகை போடுதே
வார்த்தைகளை வாரி வந்தேன்,இப்போது பேசமுடியாமல் மாறிநின்றேன்
தவிப்புகள் கூட தடைவாங்குதே, தள்ளிநின்று தாளம்போடுதே.....
உன் கண்களால் என்னை கட்டி இழுக்காதே,அதனால் நான்
தேக்கி வைத்த காதலும் தேங்காய் ஓடுப்போல் உடைந்து ஓடுதே
கட்டி வைத்தேன் என் காதல் என்னும் கோட்டையை...
அதை உன்னிடம் காட்டிவிட்டேன் என் கவிப்படும் காவியம்.....