மன்னவனே குடி மன்னவனே

(என்னவளே அடி என்னவளே பாடல் மெட்டில்)

மன்னவனே குடி மன்னவனே
அந்தக் கருமத்தை விட்டுத் தள்ளு
எந்த நாளும் அதை குடித்து குடல்
வெந்து வருத்தமும் வந்து நிற்கும் . உந்தன்
கால் பிடித்து நான் கெஞ்சுகின்றேன் கள்ளுச்
சாவடிப் போக வேண்டாம் .
போதை கொண்டோர் குடும் பமெல்லாம் நடுப்
பாதையில் நிற்கக் கண்டேன் – அந்தக்
கோலமதை கொண்டு வந்து உன்
குடும்பமும் களைய வேண்டாம் (மன்னவனே )

முடிசிக்கிக் கொண்டக் கோழியைப்போல உந்தன்
நடையது இருந்திடுமே
கால்நடைபோல் வீதியிலே கண்டஇடத்தினில்
சிறுநீரும் கழிந்திடுமே
ஊர்சனமோ உனை பார்த்ததுமே
தூ.. கண்டறாவி என்றிடுமே
உடுதுணியோ இடை நழுவிவிழ உன்
மானமும் போய்விடுமே – இது
தேவையா இல்லையா தீர்மானி நல்லபடி – நீ
அருந்தினால் மதுவுமே வருந்துவ தில்லை
திருந்திப்பார் மகிழ்வுதான்
*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (4-Sep-16, 1:32 am)
பார்வை : 112

மேலே