பறக்காத பட்டாம்பூச்சி
கள்ளிப்பால் கொடுத்து என்னை கல்லறைக்கு அனுப்பாம ...
கல்யாணம் பண்ணி வச்சி கண்ணீரில் விட்ட அம்மா...
சுமையை இறக்கிவிட்ட நீயே..
சுமக்கிறேன் வேதனையை தாயே..
இரவை பகலாக்கி நிம்மதியை தேடுறேன்.
தனிமையை துணையாக்கி தானாக பேசுறேன்.
அறையில சிறைபட்டு ஆண்டவனை ஏசுறேன்.
என்ன போல வாழ்க்கை இனி யாருக்குமே வேணாம்.
கண்ணுக்குள்ள கனவு அது எல்லாம் போச்சி வீணா...
பட்டாம்பூச்சி போல இருந்தேன் அப்போநம்ப வீட்டுல..
பட்டுபோன மரமாகி நிக்கிறேன் நடு ரோட்டுல..
எதைநான் சொல்ல நான் நானாக இல்ல.
மெத்தையில ஒத்தையா தினம் சாகுறேனே மெல்ல..
சிறக பிச்சிப்போட்டு பறக்கசொன்னா முடியுமா?
இரையா நான் மாறி போன கதை தெரியுமா?
மணம் வீசும் மலரைப்போல மௌனமாக இருக்கிறேன்.
பணம் மட்டும் போதும் என்ற வாழ்வை நானும் வெறுக்கிறேன்.
வீசும் புயல் காத்து கரையை கடந்து போகனும்.
ஆசை அழகெல்லாம் அனலில் கருகி சாகனும்..