நீ இல்லாமல் நான் இல்லை ​​

வெகு தொலைவில் இருக்கும் பகலவனாக நீ
உன்னை பார்த்து சிரிக்கும் சூரியகாந்தியாக நான்

வானில் இருக்கும் வெண்ணிலாவாக நீ
உன் ஈர்ப்பு விசையால் துள்ளி குதிக்கும் அலையாக நான்

சோலையில் இருக்கும் மலராக நீ
உன்னில் இருக்கும் தேனை குடிக்கும் வண்டாக நான்

காந்தமாக நீ அது ஈர்க்கும் இரும்பாக நான்
மொத்தத்தில் நீ இல்லாமல் நான் இல்லை ​​

எழுதியவர் : Balaji (15-Sep-16, 4:32 pm)
சேர்த்தது : balaji mani
பார்வை : 740

மேலே