கன்னியவள் இடை

அகர்முகப் பொழுதின் கனவினில்
நிகர்முகம் நிலவாய் வந்தாள் !
மாசற்ற உருவமவள் மல்லிகை​யின் ​
வாசமுள்ள வனப்பான இடையழகி !
​​கடந்திட்ட கன்னியவளைக் கண்ட​தும் ​​
இடம்பெயர்ந்தது இதயமும் அவளிடம்​ ​!
இதமான சூழலானது இதயத்தில்
பதமான இடையை நோக்கியதும் !
​தாபங்கள் வழிகின்ற ​இதயமானது
கபடமறியா கன்னியின் அழகானது !​
​​மறக்கவும் முடியாத இடையழ​கால் ​
உறங்கவும் இயலாத நிலையானது ​!

பூங்காற்று​ சுகம்தரும் சுந்தரயிடை
தங்கமாய்​ ஒளிரும் தளிர்கொடியிடை !
தஞ்சம் அடைந்திடும் நம்முள்ளமும்
நெஞ்சம் படபடக்கும் இடையழகாலே !
கண​நேரம் பார்த்தால் மெல்லிடையை ​
​குணவதியின் குணாதிசயமும் புரிந்திடும்​!
​சந்தன​ இடையழகும் ஈர்த்திட்டால்
சந்தடி​யும்​ இடையூறாய் தெரியாது !
பூமகளின் இடைதனும் மயக்கிடும்
​கோமகளின் கோலத்தால்​ பூரிக்கும்!
​மனதளவில் மாற்றிடும் ​மன்மதனாய் ​!
மனமும் உருகிடும்​ இடையழ​கால் !

​காயம்பட்ட நெஞ்சமும் ஆறிவிடும் !
​வேயப்பட்ட தேக​மாய் தேறிவிடும் !
சரசரவென விழுந்திடும் சொற்கொண்டு
சரமெனத் தொடுத்திடும் கவிமலர்களை !
இலட்சியமாக கொள்ளும் நெஞ்சமும்
இலயித்திடும் மனதும் மங்கையிடம் !
துவண்டிடும் காலத்தில் தேற்றிடும்
துவக்கிடும் இன்பத்தை இடையழகும் !
அழுகின்ற இதயமும் ஆனந்தமடையும்
எழுகின்ற உணர்வுகள் உருவமாகும் !
​களம்காண ஆவலுடன் எழுதினேன்
​உளமார உள்ளத்தில் தோன்றியதை !

​( அகர்முகம் = விடியற்காலை ​​)​

பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (16-Sep-16, 7:14 am)
பார்வை : 337

மேலே