நிலவே உனக்கு நான் சாட்சி எனக்கு
காதலன் வருகைக்காய்
காத்திருந்து காத்திருந்து
உண்ணாமல் உறங்காமல்
இருந்தாயோ வெண்ணிலவே
அதனாலோ உன் எழில் வதனம்
ஒளி இழந்து வாடி கருகியதோ
அதில் ஒரு மெல்லிய கீற்றாய் தெரிகிறது
உன் மூடிய அழகிய வாய்
இன்னும் நீ இப்படியே வாடி இருந்தால்
நாளை வானில் நீ முழுவதும்
ஒளி இழந்து தெரியாமல் போவாயோ
உன்னை போல் நானும் என் மன்னவன்
வருகைக்கு காத்திருக்கிறேன்
நான் உன் தனிமைக்கு சாட்சி நிலவே
என் தனிமைக்கு நீ சாட்சி சொல்ல வருவாயோ
தங்க நிலவே