அறியாமல் ஒரு கொலை

அருணும் குமாரும் இணை பிரியாத நண்பர்கள். ஒரே குடியிருப்பு பகுதியில் வசிக்கும் இவர்களின் அப்பாவும் கூட நல்ல ஒரு ஆரோக்கியமான ஒரு உறவுதான் இவ்விரு குடும்பங்களிலும். அது மட்டும் இன்றி இவர்கள் பிறந்ததும் ஒரே நாளில் தான். வெவ்வேறு தாய் வயிற்றில் பிறந்த இரட்டையர்கள் என்றே சொல்ல வேண்டும்.

அருண் சற்று பொறுமை சாலி. எதையும் நிதானமாகவே மேற்கொள்வான். பகுத்தறிவுக்கு அதிகம் வேலை கொடுப்பவன். ஆதலால் அருணுக்கு பேச்சை விட ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் தான் அதிகம். ஆனால் குமாரோ இதற்கு நேர்மனானவன். பொறுமை இருக்கோ இல்லையோ பொறாமை அதிகம். அதிகம் பேசுவான், பகுத்தறிவு துருப்பிடித்து இருக்கும் மண்டையில். அப்படி ஒரு பொருளை உபயோக படுத்தாமலே இருப்பான் குமார். உலக அதிசயத்தில் இடம் பெற வேண்டிய நட்பு. வெவ்வேறு குணாதிசயங்கள் உடைய இருவர் ஒற்றுமையுடன் தொடக்க பள்ளி முதல் பல வருடங்களாக தொடர்கிறது இவர்கள் நட்பு.

குமார் ஒவ்வொரு முறையும் எதாவது ஒரு பிரச்சணையில் மாட்டி கொண்டு முழிக்கும் போது அருண் தான் சாமார்த்தியமாக யோசனை சொல்லி பிரச்சனையிலிருந்து விடு பட உதவுவான். இது அவர்களுள் வாடிக்கை. பல சமயம் குமாரின் தலை தப்புவதற்கு காரணம் அருண் தான்.

இப்படியாக பழ்கலை கழக வாழ்க்கையும் முடிந்து இருவரும் வேலை செய்யும் பருவமும் வந்தும் அவர்களின் நட்பு முறியவில்லை தொடர்ந்தது. குமரனும் அருணும் ஒரே அலுவலகத்தில் வேலையும் கிடைத்தது. அருண் தன் திறமையால் பல அபூர்வங்களை நிகழ்த்தி பெரிய பதவிக்கும் வந்தான். குமாருக்கு இந்த விஷயம் உறுத்தலாகவே இருந்தது அவனுக்கு. குமாரின் பொறாமை குணம் இந்த இடத்தில் வேலை செய்ய ஆரம்பித்தது.

குமார் மேனேஜர் இடம் சென்று அவனுக்கு மட்டும் ஊதிய உயர்வு, பதவி உயர்வு கொடுத்திருக்கீங்க எனக்கு இல்லையா. நான் இங்கே வேலை செய்யலையா, அவன் மட்டும் தான் வேலை செய்யுறான என்று வாரி கொட்டி விட்டான். இதை கேட்ட மேனேஜர் ஆத்திரம் அடைந்து பொங்கி எழுந்து வெளியே போ என்று கடுமையாக கண்டித்து விட்டார். குமார் கோபத்துடன் வெளியே வந்து விட்டான். இந்த மேனேஜர் க்கு பாடம் புகுத்த வேண்டும்னு முணுமுணுத்து கொண்டான்.

நன்றாக தண்ணி அடித்தான் அன்றிரவு. மது போதையில் மனஜரின் வீடு சென்றான். "கால்லிங் பெல்லை" அடித்து கதவு திறந்தவுடன் குமார் மானேஜரை அடி அடின்னு அடித்தான். பின் மது போதையில் மயங்கி விழுந்தான். கண் விழித்து பார்த்தால் அவனை சுற்றி போலீஸ் நின்று கொண்டிருந்தது. நேற்றிரவு என்ன நடந்தது, யோசித்தான் மானேஜரை அடித்த "கேஸ்" தானே பாத்துக்கலாம்னு இருந்தான். போலீஸ் அவனை பார்த்து எதற்காக மானேஜரை கொலை செய்தாய் என்று போலீஸ் கேட்டவுடன் அவனுக்கு ஈரக்குலையே ஆடி போய் விட்டது. என்ன கொலையா அதுவும் நானா? சார் நேற்று தண்ணி அடிச்சிட்டு மேனேஜர் வீட்டுலே கலாட்டா பண்ணது என்னவோ உண்மைதான் ஆனா நான் கொலை செய்யிலே சார். I'm sorry Mr. குமார் அவர் இறந்துட்டாரு. நீங்க தாக்கியதால் தான் இறந்திருக்காரு ன்னு ரிப்போர்ட் சொல்லுது. அருணும் வேக வேகமாக விஷயம் கேள்வி பட்டு ஓடி வந்து குமாரை பார்த்து கேட்டான். "என்னடா பண்ணி வச்சுருக்கே". "டேய் நான் கொலை பண்ணுலா டா. நான் கலாட்டா பண்ணேண்டா அவர் செத்து போய்ட்டாருன்னு சொல்றங்கடா".

"டேய் இது ஒரு விபத்து" அறியாமல் செயிச்சுட்டேன்ன்னு ஓத்துக்கோ மூணு வருஷத்துல வெளியே வந்துடலாம். இது எதிர் பாரமே நடந்தது தானே தூக்கு தண்டனை எல்லாம் கொடுக்கே மாட்டாங்க. ஒப்பு கொண்டா குறைந்த பட்சம் தண்டனையோடு வெளியே வந்துரலாம்" அருண் சமாதானம் செய்தான். நீதிமன்ற தீர்ப்பும் குமாருக்கு மூன்று ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கியது. அதே நேரத்தில் அருணும் புதிய மானேஜராக பொறுப்பேற்றான். மேனேஜர் இருக்கையில் அமர்ந்தான். சோகத்தில் இருந்த அவன் முகம் மலர்ந்தது. சிறைச்சாலைக்கு கொண்டு வரப்பட்ட குமார், இதுல்லாம் உனக்காக தான் நண்பா என்றான் தனக்கு தானே. மேனேஜர் இருக்கையில் அருண், சிறைச்சாலையில் குமார், இருவரின் நினைவலைகள் பின்னோக்கி ஓடின.

மேனேஜர் அருணை கடுமையாக திட்டினார். "அருண் இன்றே நீங்கள் வேலை விட்டு போகலாம்" என்றார் மேனேஜர். "சார், என்னை மன்னிச்சிருங்க" என்றான் அருண். "என்ன அருண் நீங்க செய்தது சிறிய தவறா, உங்கள் பதவியை பயன் படுத்தி பல லட்சம் கையாடல் பண்ணி இருக்கீங்க. நாளைக்கே உங்கள் முகத்திரையை கிழிக்க போகிறேன்", என்றார் மேனேஜர். "சார் நன் நாளைக்கே கையாடல் செய்த பணத்தை உங்கள் வீட்டில் வந்து கொடுத்தறேன் சார்". என்றான் அருண். நீங்கள் பணத்தை திருப்பி கொடுத்தாலும் இனிமேல் உங்களுக்கு இங்கே வேலை இல்லை என்றார் மேனேஜர். அன்றிரவு யாருக்கும் தெரியாமல் மானேஜரை சந்திக்க சென்றான். அப்பொழுதான் குமாரும் தண்ணியை போட்டு விட்டு மானேஜரை தாக்கினான். அருண் அங்கே ஒளிந்து கொண்டான். அவன் போன பிறகு மானேஜரை தாக்கி கொலை செய்து விட்டு பழியை தூக்கி குமார் மெல் போட்டான். அருண் அலுவலகத்தில் மேலும் பதவி உயர்வு பெற்று மேனேஜர் ஆனான். டேய் குமார் நீயே வழிய வந்து மாட்டி கொண்டாயே. என் வேலையை சுலபம் ஆக்கிட்டியே. என் நண்பேன்டா என்று மலர்ந்த முகத்துடன் குமாரின் நிலைமையை நினைத்து பார்த்தான்.

சிறைச்சாலையில் குமார். டேய் அருண் நீ மேனேஜர் வீட்டில் இருந்தது எனக்கு தெரியாது என்று நினைத்தாயா. நீ ஒளிந்து கொண்டிருந்ததை நான் பார்த்தேன். போலீஸ்காரர்கள் மானேஜரை கொலை செய்து விட்டாய் என்று சொன்னதும் நீ கொலையும் செய்ய துணிந்து விட்டாய் என்று தெரிந்து கொண்டேன். உண்மையை சொல்லதற்கு காரணம் நீ தூக்கு மேடை போய் விட கூடாது என்பதற்காக. நீ என் நண்பேன்டா. நீ என்னை மாட்டி விட்டே ஆனால் நான் உன்னை காப்பாத்திட்டேன். நீ என் நண்பேன்டா. உனக்கு மண்ணுலகில் தண்டனை இல்லை, விண்ணுலகில் தான். தெய்வம் நின்று கொள்ளும்.

எழுதியவர் : பவநி (17-Sep-16, 10:00 am)
Tanglish : ariyaamal oru kolai
பார்வை : 250

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே