பிழை

'பிழை' வாக்கியத்தில் இருப்பதாக
ஆசிரியர் சொன்னார் !

சாமர்த்தியமாய் பிழைத்துகொள்
என்றார் தந்தை !

"பிழைத்து போ" என்றான்
சண்டையில் ஜெயித்தவன் !

பிழைத்திருக்கையில்
"பிழை இன்றி இரு"
என்கிறது நீதி !

பிழைத்தலிலேயே
பிழை
இருக்கிறதே?

பிழை?
பொருள் விளங்காமல்
பிழைதிருத்தம் செய்த
ஆசிரியரிடம் கேட்டேன்...

"பிழை திருத்தம்" செய்வதுதான்
"பிழைத்திருத்தல்"** என்றார் !



**
பிழைத்து இருத்தல்.

எழுதியவர் : கதிர்நிலவன் (18-Sep-16, 1:11 pm)
பார்வை : 464

மேலே