அழியாத்தமிழ்

கண்ணுபட்டு போனதம்மா - என்
தே மதுர தமிழுக்கு
கண்ணு வெச்சதாரம்மா
போர்க்கொடியை காட்டிடும்மா...

செம்மொழி என் தமிழ் மொழி
என்னை வாழ வைத்த தாய் மொழி
முது மொழி அது பழம் மொழி
ஆதியை ஆட்டிப்படைத்த வன் மொழி...

சங்கத் தமிழ் நாட்டில் உதிர்த்தெழுந்து
சிந்து நாகரீகத்தை வளர்த்தெடுத்து
சரித்திரத்தில் தனக்கொரு இடம் வரைந்து
வீராப்புடன் வீர நடை போடும் உண்ணத மொழி...

என் தங்க மொழியின் வல்லமை கூற
பாமரத்துப் பா நாட்டார் ஒன்றே போதுமம்மா
அச்சர சுத்தமாய் நாட்டுப் பா பாடி
உலகெங்கும் தமிழ் மணம் வீசிடவேயம்மா...

தமிழோடு வாழ்ந்திடும்மா
தமிழுக்கு பணி செய்திடும்மா
தமிழை வளர்த்திடும்மா
நீதான் தமிழ் தாயின் கடைக்குட்டியம்மா...

வாழ்க தமிழ்... வளர்க தமிழ்...

எழுதியவர் : உ.லெ.அப்துல் பாசித் (22-Sep-16, 8:39 am)
சேர்த்தது : அப்துல் பாசித்
பார்வை : 397

மேலே