வறுமை

பள்ளிக்கூடம் போகும் வயதில்
தொழில்கூடம் செல்வதே!
எழுதுக்கோல் பிடிக்கும் வயதில்
மண்வெட்டி பிடிப்பதே!
ஏடுகளை பிடிக்கும் வயதில்
மாடுகளை பிடித்து உழுவதே!
பூப்போன்ற இருக்கும் கையில்
வடுக்களாக மாறுவதே!
சந்தோசமாக துள்ளித் திரியும் வயதில்
வேலைக்கு செல்வதே!
வறுமை எனும் கொடுமை ஒழிந்து
வல்லரசு எனும் பெருமை வளர
முயற்சி செய்ய வேண்டும்
நாம் அனைவரும்...