சுச்சாந்து
என்னங்க நம்ம பையனுக்கு சுசாந்த்-ன்னு அழகான இந்திப் பேரா வச்சிருக்கறோம். உங்க அம்மா அவன சுச்சாந்து சுச்சாந்து- ன்னு கூப்புட்டு நாம ஆசையா வச்ச அழகான இந்திப் பேர அசிங்கப்படுத்தறாங்க. அவுங்களக் கண்டிச்சு வையுங்க. இனிமே அவுங்க நம்ம செல்லப் பையன சுச்சானந்து-ன்னு கூப்புட்டாங்கனா அவுங்கள என்னோட மாமியாருன்னும் பாக்காம அவுங்க நாக்க இழுத்து வச்சு அறுத்துப்போடுவேன் அவுங்கள கொஞ்சம் மெரட்டி வையுங்க.
@@@##
கோவிச்சுக்காத பூங்குழலி. அம்மா பட்டிக்காட்டில பொறந்து வாழ்ந்திட்டு இருக்கறாங்க. நம்ம மாதிரி அவுங்க சினிமா பாக்கறவங்க இல்ல. சினிமா ரசனை உள்ளவங்கள காலிப் பயலுக-ன்னு சொல்லி திட்டுவாங்க. அவுங்களுக்கு இந்திப் பேருங்களை சரியா உச்சரிக்கத் தெரியாது.
@@@@@@
(பாரியின் அம்மா கருப்பாயி உள்ளிருந்து:::->)
ஏன்டா மவனே பாரி எம் பேரன் சுச்சாந்து எங்கடா போயிட்டான்?
########
அவங் கடைக்கு சாக்லெட் வாங்கப் போயிருக்கறாம்மா. அவம் பேரு சுசாந்த்-மா. சுச்சாந்து இல்லம்மா.
@#####
ஏன்டா பாரி பையனுக்கு நல்ல தமிழ்ப் பேரா வைக்காம வாயில நொழையாத இந்திப் பேரா வச்சிருக்கறீங்க. அதுக்கு நா என்னடா பண்ணறது. சுச்சாந்து- ன்னு பேரு வச்சிருக்கறீங்களே, அந்தப் பேருக்கு அர்த்தம் எனனப்பா?
@@@@
அம்மா பிள்ளைங்களுக்கு இந்திப் பேர வைக்கிறதுதான் இப்பெல்லாம் நாகரிகம். அர்த்தம் தெரிந்துச்சுட்டு யாரும் பேரு வைக்கறதில்ல.
#########
?!??!!!!!!!!!!
@##########@#################
சுசாந்த் = அமைதியான
@####€€€€€€€€€€€€€€€€€€€€€€£££££££
சிரிக்க அல்ல. சிந்திக்க. தமிழ்ப் பற்றை வளர்க்க.