தங்கையின் பிரிவின் துயரம்

கடந்து வந்த காலமதை
திரும்பி பார்க்கும் போதுதான் தங்கையே! பிரிவின் துயரம்
எந்தன் நெஞ்சை வாட்டுகிறதடி...!
நீ என் மகிழ்ச்சிக்காய்
தினம் தினம் என்
அருகில் இருந்து எனை
அன்போடு அணைக்கும் போதெல்லாம் உனை உதாசீனப்படுத்தினேனே
உன்னை வெறுத்து ஒதுக்கினேனே
உன் மனதை நோகடித்தேனே
இன்று உன் அன்பிற்காய்
ஏங்கித் துடிக்கின்றேனடி.....!
அந்த இனிமையான நாட்களை எண்ணி எண்ணி வாழ்ந்த படி உன்னிடம் வர துடிக்கின்றதடி
என் மனது.......!
அந்த மரண நாளுக்காய்
தினம் தினம் காத்திருக்கின்றேனடி ஆவலுடன்....!