ஹார்மோன் கவிதை

உன் மூச்சு காற்றும் என் மூச்சு காற்றும் சரிவிகிதத்தில் கலக்கும் இடைவெளியிலே நாம் , இருப்பின்னும் கண்கள் மட்டும் பேசிக்கொண்டன...

என் தேகத்தில் உன் முத்தங்கள் விதைத்த பாகங்கள் மட்டுமே புண்ணிய ஸ்தளங்கள் , உன் மூச்சுகாற்று படர்ந்த பாகங்கள் மட்டுமே மோட்சம் பெற்றவை .....

என்னை கொல்லும் உன் இரு ஆயுதங்களை அழிக்கும் போரில் நான் எப்பொழுதும் நிராயுதபாணியாகவே நிற்க்கிறேன்

உன் சிரிப்பு என்னை அழிக்கும் ஆயுதம் என் அழுகை உன்னை அணைக்கும் ஆயுதம் ....

எழுதியவர் : Prasanth alto (25-Sep-16, 10:51 pm)
சேர்த்தது : பிரசாந்த்ஆல்டோ
Tanglish : haarMoan kavithai
பார்வை : 99

மேலே