தினம் ஒரு காதல் தாலாட்டு தனிமை - 86 = 234
“காலமெல்லாம் உன் மடியே
நான் இளைப்பாறும் பூ மேடை
நாளெல்லாம் உன் நினைவே
என்னில் நிழலாடும் தேவதை..!”
பள்ளியில் பயிலும் போது
முதல் மாணவன் நீ தான்
உனைப் பாராட்ட முந்தியடித்து
ஓடி வந்தவள் நான் தான்..!
கல்லூரி கலை விழாவில்
மூன்று பரிசும் உனக்கு தான்
அதில் ஒன்றேனும் தட்டிச் செல்ல
கொள்ளை ஆசை எனக்கு தான்..!
என்னாசை நிறைவேற
நீ தந்தாய் உன் முதல் பரிசை
அதை இன்றும் நான் வைத்திருக்கேன்
என் வீட்டு அலமாரியில் முன்புதான்..!
அழகான கட்டுமஸ்த்தான் உடலைக்கொண்டு
அசூர வீரனையும் ஒரு நொடியில் வென்று
சந்தை வீதியில் இராஜ ஊர்வலம் வந்தாய்
தங்க கோப்பையை என்னிடம் தந்தாய்..!
அந்த நாள் ஞாபகமெல்லாம்
என் மனக்கண் இப்போ அசைபோடுது
அந்த அறபுத நிகழ்ச்சி களெல்லாம்
என்னுள்ளே இப்போ படமாய் ஓடுது..!