நட்புறவை தேடி

என் மனதும்
உன் நட்புறவை தேடுகிறது
என் உயிரும்
உன் அன்பில்லாமல் வாடுகிறது

நீ என் அருகில் இருந்தால்
எரிமலையும் பனிமலையாய்
குளிரும் என் உள்ளத்திலே...!

உன்னை நினைத்து பார்த்தால்
கசக்கும் விஷமும்
தேனாய் இனிக்கும் நெஞ்சினிலே...!

நான் செய்த பாவம் என்னவோ
உன் அழகான நட்பும்
என் உயிரான அன்பு இருந்தும் - நீ
என் அருகில் இல்லாமல் போனது.

என் வீடும் உனை அழைக்கிறது
என் தெருவும் உனை அழைக்கிறது
என் மனமும் உன்னால் அலைகிறது- நண்பா...!
என் மனக்கூட்டிற்குள் வருவாயா - மீண்டும்
என் மனதில் பறப்பாயா...?

நீ என்னை விட்டு
பிரிந்தால்
நட் பூவும் வாடும்....!

என் நட்புக்காக......
-ஜ.கு.பாலாஜி-

எழுதியவர் : ஜ.கு.பாலாஜி (27-Sep-16, 1:13 pm)
சேர்த்தது : J K பாலாஜி
பார்வை : 798

மேலே