சாப விமோசனம்

கடந்து கொண்டேயிருக்கும்...
காலத்தை நான் கடக்க,
எத்தனித்த போது....

அவளைப் போன்ற,
அவளை கண்ணுற்றேன்........

தாபத்தால் தவித்த என்னை நோக்கி,
கோபத்தால் விழிசிவந்தாள்........
அவள் பார்வையில்,
கல்லாகிப் போனேன்...

கல்லானாலும் கடுந்தவம் புரிந்தேன்.....

தீக்குளித்து வரும்,
சீதையின்-
பாதத்தூளியின்,
ஸ்பரித்திற்காக........

எழுதியவர் : ரமண பாரதி (30-Jun-11, 9:11 pm)
சேர்த்தது : ரமண பாரதி
பார்வை : 386

மேலே