உனக்காக மாறினேன்
மேகமாய் உன்னை பின் தொடர்ந்தேன்
நீ மின்னலாய் மறைந்து விட்டாய்.
பூமி சூரியனை சுற்றி வருவது போல்
உன்னை சுற்றி வந்தேன் நீயோ
விண்மீனை தேடுகிறாய்...
காற்றாய் உன்னை பின் தொடர்ந்தேன்
நீயோ புயலாய் மாறி சென்று விட்டாய்..
நிலவாய் உன்னை வர்னித்தேன்
நீயோ இருட்டில் மறைந்து விட்டாய்.
மழையாய் உன் காலடி சேர்ந்தேன்
நீயோ என்னை மிதித்து விட்டு சென்றாய்.
பூவாய் உனக்காக மலர்ந்தேன் அப்போதாவது நீ என்னை சூடுவாய் என்று.
ஆனால் நீ என்னை பறிக்காமலேயே சென்று விட்டாய்...
கொலுசாய் மாறினேன் உன் காலிலேயே
தங்கி கொள்ளலாம் என்று..
நீயோ என்னை அணியாமலேயே
விட்டு விட்டாய்...
உனக்காக உறங்காமல் கண் விழித்திருந்தேன்...
நீயோ விடியலாய் விடிந்து விட்டாய்...
பனி பாறையாய் உனக்காக உருகினேன்
நீயோ கரையாமல் உறைந்து நிற்கிறாய்..
மணியாய் உனக்காக ஒலித்தேன்
நீயோ செவி சாய்காமல் சென்று விட்டாய்...
நிழலாய் உன்னை பின் தொடர்ந்தேன்
நீயோ விலகியே சென்றாய்...
உனக்காக நான் எல்லாமாய் மாறினேன்
எப்போது நீ என் மாறுதல்களை புரிந்து
கொள்வாய் என்ற கேள்வி குறியுடன் நான்?...