அவள் மீது
நீ வானவில்லி்ன் வண்ணம்
எடுத்து சேலை நெய்தவளா!
என்றும் மலர்ந்திருக்கும் தாமரை
ஒத்திருக்கும் முகமவளா!
நிலவின் வண்ணம்
எடுத்து முகத்தில் பூசியவளா!
விண்மீன்கள் பொறுக்கி
எடுத்து முக்குத்தி செய்தவளா!
வானத்தை மெத்தையாக
மாற்றி உறங்கியவளா!
உன் கண்ணில் பல
மின்னல்களை அடைத்தவளா!
உன் உதட்டில்
தேனை தடவியவாளா!
எலிசபெத் ராணியின்
கன்னத்தை கொண்டவளா!
மயில் தோகையில் பிடிங்கி
எடுத்து கூந்தலில் செருகியவளா!
குயில் குரலோசை எடுத்து
உன் குரலில் நட்டவளா!
வள்ளுவனின் முப்பாலையும்
உண்டு வாழந்தவளா!
நதிகளையில் வளைவு நெளிவு போல
இடையை கொண்டவளா!
ராஜா வாங்கி தந்த ரோஜா போல
அழகிய கால்களை கொண்டவளா!
கடல் அலைகள் நனைய ஆசைப்படும் பாதங்கள் கொண்டவளே!
வானை ஆண்ட வானுலக தேவதையா!
மண்ணில் இறங்கி
எம்மை ஆண்டவரும் எண்ணுலக
தேவதையா!