ஏங்கிய என் கண்கள்

தினமும் எனை பார்க்க வேண்டுமென நீ வந்தாயே !
ஏனோ உனை பார்க்க கூடாதென நான் சென்றேனே !
நேற்றோ நீயும் எனை பார்க்க வரவில்லையே !
இன்றோ நானும் உனை பார்க்க துடிக்கிரேனே !
இமைகள் எங்கும் உனை தேடியதே !
இதயம் எதற்கோ இங்கு வாடியதே !
மனமும் தவறை உணர்ந்து இங்கு வருந்தியதே !
இந்நொடி உனை இழந்துவிட்டேன் என்று உணர்ந்தேனே !
கண்களில் நீரோடு நான் திரும்பினேன்
கண்களில் காதலோடு நீ நின்றாயே !

எழுதியவர் : YUTHI BAVA (29-Sep-16, 3:56 pm)
சேர்த்தது : Manjula
Tanglish : yengiya en kangal
பார்வை : 207

மேலே