உறவே உயிரே
உறவே உன்னாலே
சாகாமல் வாழ்கிறேன்
உயிரே கலங்காதே
நான் உன் விழியிலே
என் காதல் நானும் சொல்லும் நேரம்
ஏனோ நாமும் பிரிந்தோம் தூரம்
நீ என்னை பார்க்கும் நேரம்
என் காதல் காற்றில் கலங்கும்
ஆனாலும் உன்னை காண கண்கள் இங்கே ஏங்கும்
நான் உன்னை பார்க்கும் நேரம்
என் நெஞ்சில் ஏனோ காயம்
அதனாலே உன்னை நானும் விலகி சென்றேன் தூரம்
உன் காதல் என்னை தாக்கும் நேரம்
அன்பே உன் தோழில் சாய தோன்றும்
இதயம் துடிப்பது உந்தன் காதலினால்
இதயம் துடிப்பது உந்தன் காதலினால்
நெஞ்சம் தாங்காதே
உன்தன் பிரிவையே
இமைகள் மூடாதே
உனை காணும் வரையிலே
எந்தன் மௌனம் பேசும் வார்த்தை
உன்தன் கண்கள் அறியுமோ அன்பே
நெஞ்சத்தில் வலிகள் கூடும் நேரம்
நீ வந்து கைகள் கோர்த்தால் போதும்
உன்னை பார்த்த நொடி மனதும் மறக்கவில்லை
மீண்டும் பார்க்கவே கண்கள் அலையுதே............