காதலா
![](https://eluthu.com/images/loading.gif)
காதலா??:-
===========
காதலா?? ...............
கற்போருக்கு கற்போர் மீது மட்டும்
காதல் வருகிறதோ?
பணத்தோலுக்கு பணத்தோல் மீது மட்டும்
காதல் வருகிறதோ?
காதலா.....?
வெள்ளைத் தோலுக்கு வெள்ளைத் தோல் மீது மட்டும் ???
வெறுக்கும் ஜாதிக்கு ஜாதி சார்ந்தோர் மீது மட்டும்?
வேதனையான ஏழைக்கு ஏழை மீது மட்டும் ??
வேர்க்கும் பணியாளருக்கு அவர் இணை மீது மட்டும்???
காதலா?.......
கண்ணில்லாதோர்க்கு கண்ணில்லாதோர் மீது மட்டும்?
கருத்தில்லாதோர்க்கு கருத்தில்லாதோர் மீது மட்டும்?
கல்வியில்லாதோர்க்கு கலவில்லாதோர் மீது மட்டும்?
கம்யூனிசத்திற்கு கம்யூனிசம் மீது மட்டும்?
காதலா?....
கருகும் இனத்திற்கு இனத்தோடு மட்டும்?
கருகும் அழகுக்கு அழகோடு மட்டும்?
கருத்தில் நுழையும் இசைக்கு இசையோடு மட்டும்?
கருத்து கவரும் ஒலிக்கு ஒலியோடு மட்டும்??
காதலா?.....
காதலா? என்று ஒரு கேள்விக்குறி வருமானால்
காதலே இல்லை அது.....
காதலா? என்று ஒரு சிறு சந்தேகப்பொறி வருமானால்
காதலே இல்லை அது.....
************ஆக்கம் ரா.கிரிஜா (கிரிஜா சந்துரு )