காதல்

காதல்
உன்னோடு நான் கொண்ட தேடல்
என்னோடு நீ கொண்ட தேடல்
நம் காதல்

தொலைந்தது இதயம்
துளைத்தது மௌனம்

காதல் சொல்ல விழி போதும்
கை சேர மொழி வேண்டும்

காதல் வெல்ல
விதி வேண்டும்
விதி வெல்ல
மதி வேண்டும்
இரண்டும் வெல்ல
காதல் வேண்டும்

இரண்டாய் பிறந்தும்
இரண்டற இருக்க
நீ வேண்டுமென
இதயம் வேண்டும்
உன்னிதயம் வேண்டும்

அருள்வாய் தருவாய்
வருவாய் உணர்வாய்
இருப்பாய் எனதாய்
என் கவிதையின் கருவாய்
என் கவிதையின் வடிவாய்

ரா தி ஜெகன்

எழுதியவர் : ரா தி ஜெகன் (1-Oct-16, 8:43 am)
சேர்த்தது : ஜெகன் ரா தி
Tanglish : kaadhal
பார்வை : 205

மேலே