கல்நெஞ்சம்

இதயம் வருடுது
பெண் பூவே
காற்றாய் உன் நினைவுகள்
நெஞ்சுக்குள் கலக்கும் போது..

உன் சின்னஞ்சிறு
கவிதையிலே
சிக்கி கிடக்குதடி
என் நெஞ்சம்..

பட்டியலிட்டு
பார்த்திருக்கிறேன்
பாவை உன்
கவிதைகளை..

பரிதவிக்கும்
இதயத்திற்கு
பாசம் கொண்டு தருவாயா..

எறும்பு ஊற
கல்லும் தேயுமடி..
என் நினைவு ஊறும்
உன் நெஞ்சுக்குள்ளே..

உன் கல்நெஞ்சம்
கரைவது
எப்போது..!!!

வலிகளுடன்..

குட்டி..!!

எழுதியவர் : குட்டி (2-Oct-16, 12:53 am)
சேர்த்தது : நாகரீக கோமாளி
பார்வை : 554

மேலே