ஓர் அற்ப பிறவி

பறவைகளில்லா
திசையில்
வானம் வெறுமையே..

விரிக்க சிறகுகளில்லை
பறக்க வானமுமில்லை
அழுக இவையுண்டு..

புத்தகங்கள் காட்டும்
அலாதி பிரியம் கூட
சுற்றத்திடமில்லை..

நெடிய வார்த்தைகளும்
சிறிய எழுத்துக்களுமே
என் தற்போதைய
கையிருப்பு..

கை செலவுக்கு
வெறும் நினைவுகளே..

பொழுதுகளை கடத்துவது
இப்போது
மலைப்பாக இல்லை
இயல்பானதாயிற்று..

நிஜமெல்லாம் சுடுகிறது
நிதானமெல்லாம் உடைகிறது..

வாழ்வென்ன வாழ்வு
மரணமும் என்னை
நேசிக்கிறது..

காற்றை குடித்து
கவிதை திண்று
வரமில்லா தவமாய்
முடிவில்லா இவ்வுலகில்
நானும் ஓர் அற்ப பிறவி..

எழுதியவர் : கோபி சேகுவேரா (6-Oct-16, 10:00 pm)
Tanglish : or arppa piravi
பார்வை : 116

மேலே