கோவை சிங்க விநாயகர் - நேரிசை வெண்பாக்கள்

சிங்க விநாயகனை சிந்தையில் வைத்தேதான்
அங்கம் புளகிக்க ஆனந்தம் - தங்கமே
என்றுநாம் சொல்லிடுவோம்; தாரணி தன்னிலே
நன்றேசொல் நாயகன் பேர்! 1

தாரணி தன்னிலே நாயகன் பேரைத்தான்
ஊரறிய நான்உரக்கச் சொல்லுவேன் - யாரறிவார்
சிங்க விநாயகன் சீர்பெருமை; சீருடையான்
எங்கள் விநாயகனைப் பாடு! 2

சிங்கமும் முன்செல்ல சிங்க விநாயகன்
சிங்கா ரமாய்ப்பின் வருவானே - இங்கவனை
தண்டனிட்டு நாம்பணிவோம்! நல்வளங்கள் தந்திடும்
அண்ணலையே நாடித் துதி! 3

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Oct-16, 12:56 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 51

மேலே