செம்மொழி பெருமை

பன்னிரண்டு உயிரும்
பதினெட்டு மெய்யும்
ஒன்றோடு ஒன்று கலந்து
இருநூற்று பதினாறு உயிர்மெய்யாகி
கடமை கண்ணியம் கட்டுப்பாடாய்
ஆயுத எழுத்தொன்று உருவாகி
ஆக மொத்தம் - இந்த
இருநூற்று நாற்பத்தேழு எழுத்துக்கள் தான்
அகில மொழிகளுக்கெல்லாம்
ஆதி மொழியாய் விளங்கும்
எந்தன் மூத்த செம்மொழியே...
உந்தன் இலக்கணத்தின்
வல்லினமும் மெல்லினமும் கண்டு
வியக்காமல் நான் இருந்தால்...
ஊமைக்கனவு கண்டவன் ஆவேன்...
இளம் கன்னியின் இடையினத்தை
கண்டும் காணமல் இருந்தால்...
அந்த தமிழன் ஆண்மையற்றவன்தான்
என் தமிழ் கன்னி மலடல்ல...
ஒன்றுக்கு இரண்டு கண்ணிருந்தும்...
தமிழ் மகள் அழகினை இரசிக்காதிருந்தால்...
நீயொரு குருடன்தான்!
பெற்ற தமிழ் தாயை
தொட்டு நீ வணங்கும் வரை...
உன்னை மயக்கும் வெள்ளைக்காரி கருவறையில்...
உன் ஆண்மையின் உயிர்மெய் எப்படி உருவாகும்?
தாயை மதிக்காத தெரியாத உன்னை
எந்தப் பெண் காதலிக்கும்?

எழுதியவர் : கிச்சாபாரதி (18-Oct-16, 9:58 pm)
Tanglish : semmozhi perumai
பார்வை : 1039

மேலே