அன்பால் என்னை

அன்பால் என்னை
கட்டிப்போட்டு காதல்
ஊஞ்சலில் ஆட்டி
உன் இதய சிறைக்குள்
என்னை ஆயுள்
கைதியாக்கியவனே ......

கண்ணை இமை காக்கலாம் ...
நீயோ என்னை
சிப்புக்குள் உள்ள
முத்தாகவே காகிறாய் ...
முத்துக்கு பெறுமதி
உண்டென உலகறியும் ....,,
எனக்கென்ன அத்தனை
மதிப்பென புரியாது ?.,

சட்டென்று மறையும்
மின்மினி போல்
வாழ்வின் இன்பங்கள்
மறைந்து போனாலும்
ஏழ்மை நம்மை
இரும்பென தீயில்
வாட்டினாலும்,,,,,

நம் காதல்
அருவியாய் என்றும்
ஓடிக்கொண்டு தான்
இருக்கும் ....!

எழுதியவர் : (20-Oct-16, 8:01 am)
Tanglish : anbaal ennai
பார்வை : 192

மேலே