தடுமாறும் தருணங்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
தருணங்கள் நேர்வதுண்டு தடுமாறும் மனிதர்க்கு
தடையென நினைத்திடும் தவறாமல் உள்ளமும் !
செயல்படும் மனங்களும் செழிப்புறும் வாழ்விலே
நாத்திகம் என்றிடுவர் பகுத்தறியும் நெஞ்சங்களை !
விபத்துகள் நடப்பதும் விந்தையிலா நிகழ்வாகுது
செய்திகளைக் காண்கிறோம் நாளும் நாளிதழில் !
விதிகளை மீறிவிட்டு விதியெனக் கூறுகிறோம்
சுயநினைவும் சிந்தனையும் சிதறிடும் நிலையது !
திசைமாறும் எண்ணமும் வசைபாட வைக்கிறது
இசைப்பாட்டு கேட்பதால் எசப்பாட்டும் பிறக்கிறது !
கவனமும் கைவிடுகிறது செல்கிறது நமைவிட்டு
காரணம் அதுவொன்றும் ஆகிவிடும் விபத்திற்கு !
நினைவுகள் அலைமோதும் நிழலாய்த் தொடரும்
சாலையை கடந்திடும் நேரத்திலும் உடன்வரும் !
கணநேரம் காத்திடாமல் உள்ளமும் துறுதுறுக்கும்
காட்சியும் மாறிடும் விபத்துகளும் நிகழ்ந்திடும் !
வாகனங்கள் கூடுகிறது நாளொரு மேனியுமாய்
சிறார்களும் பறக்கின்றனர் புறாக்களாய் வீதியில்
சாலைகள் விரியவில்லை ஈடாக இருபுறமும்
கடந்திடும் எனக்கோ தடுமாறும் தருணங்களே !
பழனி குமார்