நினைத்து நினைத்து பார்த்தேன்
நினைத்து நினைத்து பார்த்தேன் ..
காலை நாட்காட்டி கிழிக்கும் போது
உனக்காக காத்திருந்த கல்லூரி வாசல்
சொர்க்கத்தின் திறப்பு வாசல் என்று ....
தினமும் கடந்து போகிறாய்
குனிந்த தலை நிமிராமல் ...
நீ நிமிர்ந்தால்
அன்று பூக்கள் எல்லாம் தலைகுனியும்...
பூமிக்கு சற்றும் வலிக்காமல்
நடக்கும் உன் பாதங்கள் தாங்க
பூமியும் தன் சுழற்சியை
விட்டு விடும் நீ கடக்கும் வரை ...
நீ அடிக்கடி உரசி செல்வதால்
சாளரத்தின் கம்பிகள்
தங்க கம்பிகளாக மாறி போகிறது ....
உன் கண் படாத பொருட்களிளெல்லாம்
ஏதோ ஒரு குறை தென் படுகிறது ....
செவிடனுக்கும் காது கேட்கும்
நீ பேசும் தேன் மொழிகள் கேட்டால் ....
என் கவிதைக்கும் கால் முளைக்கும்
ஒரு தரம் எனை நீ பார்த்தால் ...