என் பாரதி கண்ணம்மா

அன்பே!
உன் சின்ன சின்ன சந்திப்பில்தான்,
என் காதல் கண்ணாடிப் பார்க்கிறதே....உன் கண்மணியில்!!
காற்றில் பரந்த உன் முந்தானை என்மேல்.பட்டதில்,
மனமோ விஸ்வரூபம் எடுக்கிறதே......வாட்சாயனாவாக!
உன் பின்னே வரும் நிழலில் நான் நடக்கையில்,
உன் மனதின் நெகிழ்வுகளை உணர்ந்தேன் பெண்ணே..
உன் உடம்பின் இரத்தமாய் நான் ஓடுவதைக்கண்டு ,
என் கண்ணீர் ஓடுகிறதே....உன் நிழலின் தடங்களில்!!
என் பாரதி கண்ணம்மா...
என் பக்தி எல்லாம் நீயம்மா...!!
கரையாய் நான்,
கடலாய் நீ,
காதலாய் பேசிக்கொள்வோம்...அலை அலையாய் பெண்ணே ..!!