சொல்லாமலே

காதல் அது ஒரு வரலாற்று காவியம்
காதல் அது ஒரு மனமாற்றம்
காதல் அது ஒரு முன்னேற்றம்...

காதல் என்மனதிலும் அரும்பு விட
ஆரம்பித்தது...
என் வாழ்க்கையில் எத்தனையே
பெண்களை பார்த்துள்ளேன்
பேசியுள்ளேன் பழகியுள்ளேன்
என் மனதை பரிக்கொடுத்தது அவளிடமே...

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
ஆனால் என் மனதில்
அவள்தான் பேரழகியாய் தெரிந்தாள்...
அவளின் ஒவ்வொரு அசைவும்
எனக்கு அர்த்தமுள்ளதாகவே தென்பட்டது....

அவளை காதலித்த நாள் முதலே
என்னுள் எத்தனையோ மாற்றங்கள்
என்னை நானே நேசிக்க ஆரம்பிம்தேன்...
என்னை அழகு படுத்திக்கொண்டேன்
என்னுடைய உடல் மொழியை
மாற்றிக்கொண்டேன்
விடியற்காலையிலே எழ அரம்பித்தேன்...

அவளின் அந்த கடைக்கண்
பார்வை என்மீது பட்டதும்
என் மனதில் ஆயிரம் பூ பூக்கும்...
இந்த உலகையே ஆட்சிசெய்வது
போல் எனக்குள் ஒரு உணர்வு தோன்றும்...
தன்னம்பிக்கை மொட்டு பூவாய் மலரும் ...

அவளிடம் என் காதலை சொல்லாமலே
என் காலம் முழுவதுமே முடிந்தாலும்
அது எனக்கு வசந்தகாலமே...
இருப்பினும் என்காதலை அவளிடம்
சொல்லிவிட நினைத்தேன்...

என்காதலை அவள் ஏற்க மறுத்து விட்டால்...?
அந்த வலியை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது
அதனால் அவளிடம் சொல்லாமலே
நான் அவளை காதலிக்கிறேன்.....

எழுதியவர் : செல்வமுத்து.M (24-Oct-16, 12:08 pm)
Tanglish : sollaamale
பார்வை : 120

மேலே